நான் பாலகுமார், நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்தவர். எனது கிராமத்தில் தொடர்த்தேர்ச்சியாக மதுசாரப்பாவனைக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை செய்து வந்ததில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளேன்;. நாம் ஒரு குழுவாக இணைந்தே இச்செயற்பாடுகளை மேற்கொண்டோம். கடந்த 2017களில் ஆரம்பிக்கப்பட்ட எமது செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்று தெளிவுப்படுத்தல், பிள்ளைகளினூடாக இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு வலுப்டுத்தல், பெண்களை வலுப்படுத்தல், சாராயம் குடிப்பதிலிருந்து விடுதலையாவதற்கு பாவனையாளர்களுக்கு உதவி செய்தல் என பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றின் பெறுபேறுகளாக, மதுசாரப் பாவனை எமது கிராமத்தில் குறைவடைந்தது, .மதுசாரம் குடிப்போர் குடிக்கும் அளவைக் குறைத்தனர், சிறந்த முறையில் பெண்களும், பிள்ளைகளும் தமது பிரதிபலிப்புக்களை வழங்கினர் அதன் மூலம் குடித்துவிட்டு மேற்கொள்ளப்படும் வீட்டு வன்முறைகள் குறைவடைந்தன, குடிப்பதற்காக செலவிடும் …
Author: Nidarshana Selladurai
நான் லெதெண்டி தோட்டத்த சேர்ந்தவர். தோட்டத் தொழிலையே எனது பிரதான வருமானமாகக் கொண்டுள்ளேன். அதிகளவு சாராயம் குடித்து வந்தேன், எனது தோட்டத்தின் சுகாதார குழுவினரும், எடிக் நிறுவனத்தின் அதிகாரிகளும் என்னைத் தொடர்ந்து சந்தித்தனர், நான் தினமும் சாராயம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எனக்குத் தெளிவூட்டினர். ஏற்கனவே எனது வீட்டு அங்கத்தவர்கள் வறுமையில வாடி வந்தனர். நான் குடிப்பதால் எனது பெருந்தொகை அதற்கு செலவிடப்பட்டு வந்தது. ஆகவே அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்திற்கு தோட்டத்து சுகாதார குழுவினர், எடிக் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட எனது வீட்டாரும் உதவி செய்தனர். நான் குடிக்கும் அளவையும், தினமும் குடிப்பதையும் நிறுத்தினே;. எனது வீண் செலவு சடுதியாகக் குறைந்தது. சேமிக்கப்பட்ட சிறு …
பா. சிவநேசகுமர் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் 2017ம் ஆண்டு மார்கழி மாதத்தில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின்படி எனது தலமையில் எங்களது பொதுசுகாதார பரிசோதகர்கள் குழு கரச்சி பிரதேசத்தில் உள்ள 196 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடி புகையிலை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனையை தவிர்த்துள்ளார்கள். புகைப் பொருட் பாவனையாளர்கள் புகைப்பிடிப்பதற்கான ஒரு இடமாக உணவு கையாளும் நிலையங்கள் பயன்படுத்துவதாகவும், இது புதிய பாவனையாளர்கள் உருவாகும் ஒரு இடமாகவும் இருப்பதாளாலும் இதiனை அறிந்து நாம் உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுடன் புகைத்தலால் ஏற்படக்கூடிய சுகாதார சமூக பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி அவர்களாகவே இந்த …
நான் பொது சுகாதாரப்பரிசோதகர் இராஜ மேனகன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றுகிறேன். அரசு புகைப் பெருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கோடும் புகைப் பொருள் பாவனையாளர்களிற்கு புகைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிவு சென்றடைய வேண்டும் என்பதற்காகவும். அரசு சிகரட் பெட்டியில் உருவப்பட சுகாதார எச்சரிக்கையை பல தடைகளிற்கு மத்தியில் கொண்டு வந்தது ஆனால் இந்த எச்சரிக்கை தகவல் சிகரட் பெட்டியில் மட்டும் காணப்பட்டது ஏனைய பீடி, சுருட்டு பொதிகளில் காணப்படவில்லை ஆகையால் பீடி, சுருட்டு பாவனையாளர்களிற்கு இந்த உருவப்பட சுகாதார எச்சரிக்கை தகவல் சென்றடையவில்லை என்பதற்காக யாழ்பாணத்தில் இருக்கின்ற பிரபல பீடி கம்பனிக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த வழக்கின் பிற்பாடு பீடி …
எனது பெயர் அய்ங்கரன் நான் புத்தூர் பிரதேசசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நடப்புக்காலத்திற்கான கௌர உறுப்பினராக மக்களிற்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். எங்களுடைய பிரதேசத்தில் எங்களுடைய மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பாரிய பெ ாறுப்பு எங்களிடம் இருக்கின்றது . இதனை நோக்காக கொண்டு மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடையங்களை களைய வேண்டும் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது . நாட்டில் மக்களை பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் உருவாக்குகின்றார்கள் அதேபோல் எங்களுடைய பிரதேசத்திலும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச சபையில் பிரேரணை ஒன்றினை உருவாக்கினேன் அதாவது புகையிலை மற்றும் மதுசாரம் உட்பட ஏனைய போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுப்பதற்காக உருவாக்கிய பிரேரணை அதில் குறிப்பிடப்பப்பட்டதாவது பாடசாலைகள், விளையாட்டு …
அதிகமான பணத்தை மதுசாரத்திற்காக செலவழித்தேன். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் போதாமல் இருந்தமை உண்மையே. ஆனால் எமது தோட்டத்தில் கடமை புரியும் சுகாதார உத்தியோகத்தர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய என்னை மாற்றியமைப்பதற்கும், எனது மதுசார பாவனையைக் குறைப்பதற்கும் ஆரம்பித்தேன். மதுசாரத்திற்கென நான் செலவழிக்கும் உண்மையான தொகையை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ச்சியாக என்னை கண்காணித்தனர். இப்போது நான் மதுசார பாவனையைக் குறைத்துள்ளேன், மதுசாரத்திற்கு செலவழிக்காமல் மிகுதிப்படுத்தும் பணத்தில் கோழி பண்ணை சுய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். நான் பொருளாதார ரீதியில் மிகவும் திருப்தியடைகின்றேன் அதுமட்டுமின்றி எனது குடும்பத்திலுள்ளோரும் இப்போது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றனர். மனோகரன் – லெதண்டி …
நான் நோர்வூட் கீழ்ப்பிரிவில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்தி வந்தேன் ஆனால் சில காரணங்களினால் அவை விடப்பட்டது. அதுமட்டுமின்றி நான் மதுசாரம் அருந்துவதற்கும் ஆரம்பித்தேன். நிலையான தொழிலற்ற நிலையிலும் எனக்கு கிடைக்கும் பணத்தின் பெருந்தொகையை மதுசாரத்திற்கென்று செலவழித்தேன். ஆனால் எமது தோட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ADIC நிறுவனத்தின் அதிகாரிகள் எனது மதுசார பாவனையை மாற்றியமைக்க உதவி செய்தனர். நான் மதுசாரத்திலிருந்து தற்போது விடுதலையாவதற்கு ஆரம்பித்து விட்டேன். எனக்கு கிடைக்கப்பெற்ற ஊக்கமளிப்பே இதற்கு காரணம் என நான் நம்புகிறேன். எனக்கு ஏற்ற தொழிலையும் தேடுவதற்கு ஆரம்பித்து விட்டேன். சண்முகராஜா …
நாங்கள் வனராஜா தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கட் அணியைச் சேர்ந்தவர்கள், எமது அணியின் தலைவராக நானே தற்போது செயற்படுகின்றேன். எமது பிரதேசத்தில் உள்ள மிகவும் திறமையான வீரர்கள் எமது அணியில் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன் எந்தவொரு போட்டிக்கு சென்றாலும் அதனை வெற்றி கொண்டே திரும்புவோம். போட்டியில் வெற்றி பெறும் போது பரிசில்களாக வெற்றிக்கேடயம் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கப்படும். ஆரம்பத்தில் நாங்கள் கிடைத்தப் பணத்தைக்கொண்டு போட்டி நிறைவடைந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே மதுசாரம் அருந்துவோம் ஆனால் கடந்த 2017ம் ஆண்டு இடைக்காலப்பகுதியில் ADIC நிறுவனத்துடன் எமக்கு தொடர்பு ஏற்பட்டது. எமது மதுசார பாவனை தொடர்பாகவும் அதற்காக நாம் செலவழிக்கும் தொகை பற்றியும் பிரயோக ரீதியில் மிகவும் தோழமையுடன் எமக்கு தௌpவூ+ட்டினர் ஆரம்பத்தில் எமக்கு அதில் இணக்கப்பாடு …
Social Profiles