நான் பொது சுகாதாரப்பரிசோதகர் இராஜ மேனகன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றுகிறேன்.
அரசு புகைப் பெருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கோடும் புகைப் பொருள் பாவனையாளர்களிற்கு புகைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிவு சென்றடைய வேண்டும் என்பதற்காகவும். அரசு சிகரட் பெட்டியில் உருவப்பட சுகாதார எச்சரிக்கையை பல தடைகளிற்கு மத்தியில் கொண்டு வந்தது ஆனால் இந்த எச்சரிக்கை தகவல் சிகரட் பெட்டியில் மட்டும் காணப்பட்டது ஏனைய பீடி, சுருட்டு பொதிகளில் காணப்படவில்லை ஆகையால் பீடி, சுருட்டு பாவனையாளர்களிற்கு இந்த உருவப்பட சுகாதார எச்சரிக்கை தகவல் சென்றடையவில்லை என்பதற்காக யாழ்பாணத்தில் இருக்கின்ற பிரபல பீடி கம்பனிக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த வழக்கின் பிற்பாடு பீடி கம்பனி தனது பீடி பொதிகளில் உருவப்பட சுகாதார எச்சரிக்கைகளை காட்சிப்படுத்தியது இந்த சம்பவம் தான் இன்று இலங்கையில் இருக்கும் பீடி, சுருட்டு பொதிகளில் உருவப்பட சுகாதார எச்சரிக்கை தகவல் காட்சிப்படுத்துவதற்கான ஒருகாரணமாகவும் அமைந்திருக்கலாம்.