நான் பாலகுமார், நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்தவர். எனது கிராமத்தில் தொடர்த்தேர்ச்சியாக மதுசாரப்பாவனைக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை செய்து வந்ததில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளேன்;. நாம் ஒரு குழுவாக இணைந்தே இச்செயற்பாடுகளை மேற்கொண்டோம். கடந்த 2017களில் ஆரம்பிக்கப்பட்ட எமது செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்று தெளிவுப்படுத்தல், பிள்ளைகளினூடாக இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு வலுப்டுத்தல், பெண்களை வலுப்படுத்தல், சாராயம் குடிப்பதிலிருந்து விடுதலையாவதற்கு பாவனையாளர்களுக்கு உதவி செய்தல் என பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றின் பெறுபேறுகளாக, மதுசாரப் பாவனை எமது கிராமத்தில் குறைவடைந்தது, .மதுசாரம் குடிப்போர் குடிக்கும் அளவைக் குறைத்தனர், சிறந்த முறையில் பெண்களும், பிள்ளைகளும் தமது பிரதிபலிப்புக்களை வழங்கினர் அதன் மூலம் குடித்துவிட்டு மேற்கொள்ளப்படும் வீட்டு வன்முறைகள் குறைவடைந்தன, குடிப்பதற்காக செலவிடும் பணத்தை எமது கிராம மக்கள் சேமிப்பதற்கு ஆரம்பித்தனர். இவை நான் கண்ட மாற்றங்கள். இவை எனது கிராமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தமைக் குறிப்பிடத்தக்கது. எமது செயற்பாடுகள் தொடரும் என்பது தெளிவு.