எனது பெயர் அய்ங்கரன் நான் புத்தூர் பிரதேசசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நடப்புக்காலத்திற்கான கௌர உறுப்பினராக மக்களிற்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
எங்களுடைய பிரதேசத்தில் எங்களுடைய மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பாரிய பெ ாறுப்பு எங்களிடம் இருக்கின்றது . இதனை நோக்காக கொண்டு மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடையங்களை களைய வேண்டும் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது . நாட்டில் மக்களை பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் உருவாக்குகின்றார்கள் அதேபோல் எங்களுடைய பிரதேசத்திலும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச சபையில் பிரேரணை ஒன்றினை உருவாக்கினேன் அதாவது புகையிலை மற்றும் மதுசாரம் உட்பட ஏனைய போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுப்பதற்காக உருவாக்கிய பிரேரணை அதில் குறிப்பிடப்பப்பட்டதாவது பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் விளையாட்டு முற்றங்கள், வணக்கஸ்த்தலங்கள் போண்றவற்றில் இருந்து 500 மீற்றர் பிரதேசத்திற்குட்பட்ட இடங்களில் இலங்கை அரசாங்கத்தால் போதைபொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பொருட்களை விற்கவே அல்லது வாங்கவே கையாளவே முற்றாகத் தடை இந்த தடையை மிறுபவர்களிற்கு எதிராக நடவெடிக்கை எடுக்க தகுதிவாய்ந்த அதிகாரிககளும் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக புத்துர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுசாரம், புகைப்பொருள் ஏனைய போதைப் பொருள் விற்பனை, பாவனை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. நான் நினைக்கின்றேன் இதுவும் ஒரு போதைப் பொருள் தடுப்பு செயற்பாடுகளிற்கு துணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.