நான் நோர்வூட் கீழ்ப்பிரிவில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்தி வந்தேன் ஆனால் சில காரணங்களினால் அவை விடப்பட்டது. அதுமட்டுமின்றி நான் மதுசாரம் அருந்துவதற்கும் ஆரம்பித்தேன். நிலையான தொழிலற்ற நிலையிலும் எனக்கு கிடைக்கும் பணத்தின் பெருந்தொகையை மதுசாரத்திற்கென்று செலவழித்தேன். ஆனால் எமது தோட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ADIC நிறுவனத்தின் அதிகாரிகள் எனது மதுசார பாவனையை மாற்றியமைக்க உதவி செய்தனர். நான் மதுசாரத்திலிருந்து தற்போது விடுதலையாவதற்கு ஆரம்பித்து விட்டேன். எனக்கு கிடைக்கப்பெற்ற ஊக்கமளிப்பே இதற்கு காரணம் என நான் நம்புகிறேன். எனக்கு ஏற்ற தொழிலையும் தேடுவதற்கு ஆரம்பித்து விட்டேன்.
சண்முகராஜா