அதிகமான பணத்தை மதுசாரத்திற்காக செலவழித்தேன். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் போதாமல் இருந்தமை உண்மையே. ஆனால் எமது தோட்டத்தில் கடமை புரியும் சுகாதார உத்தியோகத்தர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய என்னை மாற்றியமைப்பதற்கும், எனது மதுசார பாவனையைக் குறைப்பதற்கும் ஆரம்பித்தேன். மதுசாரத்திற்கென நான் செலவழிக்கும் உண்மையான தொகையை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ச்சியாக என்னை கண்காணித்தனர். இப்போது நான் மதுசார பாவனையைக் குறைத்துள்ளேன், மதுசாரத்திற்கு செலவழிக்காமல் மிகுதிப்படுத்தும் பணத்தில் கோழி பண்ணை சுய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். நான் பொருளாதார ரீதியில் மிகவும் திருப்தியடைகின்றேன் அதுமட்டுமின்றி எனது குடும்பத்திலுள்ளோரும் இப்போது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றனர்.
மனோகரன் – லெதண்டி