அதிகமான பணத்தை மதுசாரத்திற்காக செலவழித்தேன். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் போதாமல் இருந்தமை உண்மையே. ஆனால் எமது தோட்டத்தில் கடமை புரியும் சுகாதார உத்தியோகத்தர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய என்னை மாற்றியமைப்பதற்கும், எனது மதுசார பாவனையைக் குறைப்பதற்கும் ஆரம்பித்தேன். மதுசாரத்திற்கென நான் செலவழிக்கும் உண்மையான தொகையை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ச்சியாக என்னை கண்காணித்தனர். இப்போது நான் மதுசார பாவனையைக் குறைத்துள்ளேன், மதுசாரத்திற்கு செலவழிக்காமல் மிகுதிப்படுத்தும் பணத்தில் கோழி பண்ணை சுய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். நான் பொருளாதார ரீதியில் மிகவும் திருப்தியடைகின்றேன் அதுமட்டுமின்றி எனது குடும்பத்திலுள்ளோரும் இப்போது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றனர். மனோகரன் – லெதண்டி …
Month: October 2019
நான் நோர்வூட் கீழ்ப்பிரிவில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்தி வந்தேன் ஆனால் சில காரணங்களினால் அவை விடப்பட்டது. அதுமட்டுமின்றி நான் மதுசாரம் அருந்துவதற்கும் ஆரம்பித்தேன். நிலையான தொழிலற்ற நிலையிலும் எனக்கு கிடைக்கும் பணத்தின் பெருந்தொகையை மதுசாரத்திற்கென்று செலவழித்தேன். ஆனால் எமது தோட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ADIC நிறுவனத்தின் அதிகாரிகள் எனது மதுசார பாவனையை மாற்றியமைக்க உதவி செய்தனர். நான் மதுசாரத்திலிருந்து தற்போது விடுதலையாவதற்கு ஆரம்பித்து விட்டேன். எனக்கு கிடைக்கப்பெற்ற ஊக்கமளிப்பே இதற்கு காரணம் என நான் நம்புகிறேன். எனக்கு ஏற்ற தொழிலையும் தேடுவதற்கு ஆரம்பித்து விட்டேன். சண்முகராஜா …
Social Profiles