நாங்கள் வனராஜா தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கட் அணியைச் சேர்ந்தவர்கள், எமது அணியின் தலைவராக நானே தற்போது செயற்படுகின்றேன். எமது பிரதேசத்தில் உள்ள மிகவும் திறமையான வீரர்கள் எமது அணியில் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன் எந்தவொரு போட்டிக்கு சென்றாலும் அதனை வெற்றி கொண்டே திரும்புவோம்.
போட்டியில் வெற்றி பெறும் போது பரிசில்களாக வெற்றிக்கேடயம் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கப்படும். ஆரம்பத்தில் நாங்கள் கிடைத்தப் பணத்தைக்கொண்டு போட்டி நிறைவடைந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே மதுசாரம் அருந்துவோம் ஆனால் கடந்த 2017ம் ஆண்டு இடைக்காலப்பகுதியில் ADIC நிறுவனத்துடன் எமக்கு தொடர்பு ஏற்பட்டது. எமது மதுசார பாவனை தொடர்பாகவும் அதற்காக நாம் செலவழிக்கும் தொகை பற்றியும் பிரயோக ரீதியில் மிகவும் தோழமையுடன் எமக்கு தௌpவூ+ட்டினர் ஆரம்பத்தில் எமக்கு அதில் இணக்கப்பாடு இருக்கவில்லை.
எனினும் மதுசாரத்திற்காக செலவழிக்கும் பணம் தொடர்பில் நாங்கள் பிறகு சிந்திக்க ஆரம்பித்தோம். தொடர்ந்தும் ADIC நிறுவன உறுப்பிணர்கள் எம்முடன் இருந்து எம்மை வழிநடத்தினர். நான் பெரிய பணக்காரன் அல்ல, அதே போன்றுதான் எனது நண்பர்களும் பெரிய பணக்காரர்கள் அல்ல, நாம் எதற்காக பரிசிலாக கிடைக்கப்பெறும் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டும்? என நினைத்துப் பார்த்தோம். பிறகு அதனை மாற்றுவதற்கு ஆரம்பித்தோம். இப்போதும் அநேகமாக எமது அணி வெற்றிவாகை சூடுகிறது ஆனால் அதில் கிடைக்கப்பெறும் பணத்தை அணியிலுள்ளோர் சமமாக பிரித்து வீட்டு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றோம். அது மட்டுமின்றி ஏனைய நாட்களில் நாங்கள் மதுசாரம் அருந்தும் அளவையும் குறைத்துள்ளோம் அதற்கு செலவழித்த பணத்தொகையை வேறு ஏதேனும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.
– பிரதீபன்