நான் பாலகுமார், நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்தவர். எனது கிராமத்தில் தொடர்த்தேர்ச்சியாக மதுசாரப்பாவனைக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை செய்து வந்ததில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளேன்;. நாம் ஒரு குழுவாக இணைந்தே இச்செயற்பாடுகளை மேற்கொண்டோம். கடந்த 2017களில் ஆரம்பிக்கப்பட்ட எமது செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்று தெளிவுப்படுத்தல், பிள்ளைகளினூடாக இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு வலுப்டுத்தல், பெண்களை வலுப்படுத்தல், சாராயம் குடிப்பதிலிருந்து விடுதலையாவதற்கு பாவனையாளர்களுக்கு உதவி செய்தல் என பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றின் பெறுபேறுகளாக, மதுசாரப் பாவனை எமது கிராமத்தில் குறைவடைந்தது, .மதுசாரம் குடிப்போர் குடிக்கும் அளவைக் குறைத்தனர், சிறந்த முறையில் பெண்களும், பிள்ளைகளும் தமது பிரதிபலிப்புக்களை வழங்கினர் அதன் மூலம் குடித்துவிட்டு மேற்கொள்ளப்படும் வீட்டு வன்முறைகள் குறைவடைந்தன, குடிப்பதற்காக செலவிடும் …
Blog Posts
நான் லெதெண்டி தோட்டத்த சேர்ந்தவர். தோட்டத் தொழிலையே எனது பிரதான வருமானமாகக் கொண்டுள்ளேன். அதிகளவு சாராயம் குடித்து வந்தேன், எனது தோட்டத்தின் சுகாதார குழுவினரும், எடிக் நிறுவனத்தின் அதிகாரிகளும் என்னைத் தொடர்ந்து சந்தித்தனர், நான் தினமும் சாராயம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எனக்குத் தெளிவூட்டினர். ஏற்கனவே எனது வீட்டு அங்கத்தவர்கள் …
பா. சிவநேசகுமர் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் 2017ம் ஆண்டு மார்கழி மாதத்தில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின்படி எனது தலமையில் எங்களது பொதுசுகாதார பரிசோதகர்கள் குழு கரச்சி பிரதேசத்தில் உள்ள 196 …
நான் பொது சுகாதாரப்பரிசோதகர் இராஜ மேனகன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றுகிறேன். அரசு புகைப் பெருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கோடும் புகைப் பொருள் பாவனையாளர்களிற்கு புகைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிவு சென்றடைய வேண்டும் என்பதற்காகவும். அரசு சிகரட் பெட்டியில் உருவப்பட சுகாதார எச்சரிக்கையை …
எனது பெயர் அய்ங்கரன் நான் புத்தூர் பிரதேசசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நடப்புக்காலத்திற்கான கௌர உறுப்பினராக மக்களிற்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். எங்களுடைய பிரதேசத்தில் எங்களுடைய மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பாரிய பெ ாறுப்பு எங்களிடம் இருக்கின்றது . இதனை நோக்காக கொண்டு மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் …
அதிகமான பணத்தை மதுசாரத்திற்காக செலவழித்தேன். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் போதாமல் இருந்தமை உண்மையே. ஆனால் எமது தோட்டத்தில் கடமை புரியும் சுகாதார உத்தியோகத்தர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய என்னை மாற்றியமைப்பதற்கும், எனது மதுசார பாவனையைக் குறைப்பதற்கும் ஆரம்பித்தேன். மதுசாரத்திற்கென நான் செலவழிக்கும் உண்மையான தொகையை நான் உணர்ந்து கொண்டேன். …
நான் நோர்வூட் கீழ்ப்பிரிவில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்தி வந்தேன் ஆனால் சில காரணங்களினால் அவை விடப்பட்டது. அதுமட்டுமின்றி நான் மதுசாரம் அருந்துவதற்கும் ஆரம்பித்தேன். நிலையான தொழிலற்ற நிலையிலும் எனக்கு கிடைக்கும் பணத்தின் பெருந்தொகையை மதுசாரத்திற்கென்று செலவழித்தேன். ஆனால் எமது தோட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ADIC …
Social Profiles