20 Nov

ADIC Press Release on credibility of the research quoted for 2018 beer tax reduction

2018ம் ஆண்டுக்கான  பாதீட்டில் பியருக்கான வரி குறைப்பு தீர்மானத்திற்கு  ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்தளவு உண்மையுள்ளது?

2018 நவம்பர் 09ம் திகதி நிதி அமைச்சர் மங்கள் சமரவீர அவர்களால் முன்வைக்கப்பட்ட  பாதீட்டு முன்வைப்பின் போது பியர் வரியை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் மேலும் கூறப்பட்ட விடயமானதுஇ இலங்கையில் மதுசார பாவனையில் ஈடுபடுபவர்களில் 49 வீதமானோர் கசிப்பு (சட்டவிரோத மதுசாரம்) பாவனையில் ஈடுபடுபவர்கள் என்பதாகும். அவர் அத்தீர்மானத்தை எடுக்க கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வை ஆதாரமாக முன்வைத்தார். எனினும் குறிப்பிட்ட ஆய்வானது கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அல்லவென கொழும்பு பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் விரிவுரையாளரான பிரியங்க துனுசிங்க அவர்களால் தமது தனிப்பட்ட ஆய்வாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் ஆய்வு இன்னும் முடிவுபெறவில்லையெனவும் அது கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வு அல்லவென அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது மதுசார பாவனையின் பரவல்வீதத்தை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அல்ல என்பதோடு குடும்ப வருமானம் மற்றும் செலவு தொடர்பிலான ஆய்வுக்கு (Household Income and Expenditure Survey – HIES) இரண்டாம்நிலை தரவாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவே காணப்படுகின்றது. அதில்இ குறைந்த வருமானம் பெறுவோரில் அனைவரும் மதுசாரத்திற்காக செலவிடும் பணம் கசிப்பு (சட்டவிரோத மதுசாரம்) அருந்துவதற்காக செலவிடப்படுகின்றது என எடுகோலாக கொண்டே தரவு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு ஆய்வறிக்கையிலும் (Research report))இ சஞ்சிகையிலோ அல்லது எந்தவொரு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநாட்டிலும் இன்னமும் முன்வைத்திருக்கப்படவில்லை. இன்னும் முற்றுப்பெறாத ஆய்வு தேசிய ரீதியான தீர்மானம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது பாரதூரமான பிரச்சனையாகும்.  இந்த ஆய்வு தொடர்பில் முதன் முறையாக அறியக்கூடியதாக இருந்ததுஇ பாதீட்டு முன்வைப்பிற்கு முன்னர் அதாவது 2017 நவம்பர் மாதம் 07ம் DAILY  FT   பத்திரிக்கையில் ஆகும். அதே நேரம் லங்காதீப பத்திரிக்கை 2017 நவம்பர் 08ம் திகதி இந்த ஆய்வு பிரசுரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சர் அவர்கள் இந்த ஆய்வை அடிப்படையாகக்கொண்டே 2017 நவம்பர் 9ம் திகதி பியர் மீதான வரி குறைப்பு முன்வைக்கப்படுகின்றது.

சாதாரணமாக முழு நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக்கொண்டிருத்தல் வேண்டும். மேலும் பொது நம்பிக்கை என்பது அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகும்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிபுனர்களினால் மதுசாரம் மீதான வரி அதிகரித்தலின் ஊடாக புதிதாக பாவனையை ஆரம்பித்தல் மற்றும் பாவிக்கும் அளவுவிலும் குறைவு ஏற்படும் என விஞ்ஞானபூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பல இருந்தும் கூட  அவை அதாரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதோடு அதற்கு மாறுப்பட்ட தரவுகளை கொண்டுள்ள ஆய்வு மற்றும் முற்றுப்பெறாத ஆய்வு மற்றும் ஆய்வறிக்கைகள் தேசிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதாரமாக கொள்ளப்பட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தயுள்ளது.

ADIC Sri Lanka
No: 40/18, Park Road, Colombo 05.
Tel : +94 112 584416 / +94 112 592515
Fax : +94 112 508484
Email : adicc@sltnet.lk